×

அழகர்கோவில் உண்டியல் வசூல் ரூ.52.65 லட்சம்

அழகர்கோவில்: மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உலக பிரசித்திப்பெற்ற கள்ளழகர் என்று அழைக்கக்கூடிய சுந்தராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோயில் முக்கிய வழிபாட்டுத்தலமாகவும் மற்றும் தென்தமிழகத்தின் சுற்றுலா பகுதியாகவும் உள்ளது. இக்கோயிலில் மாதாந்திர உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வு கோயில் துணை ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரி ராமசாமி, மதுரை உதவி ஆணையர் விஜயன், தக்கர் பிரதிநிதி ஆய்வர், கண்காணிப்பாளர் பிரதிபா மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.52 லட்சத்து 65 ஆயிரத்து 157 ரொக்கமும், தங்கம் 66 கிராமும் , வெள்ளி 154 கிராமும் உண்டியல் வசூலாக கிடைத்தது….

The post அழகர்கோவில் உண்டியல் வசூல் ரூ.52.65 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Alagharkovil ,Madurai district ,Sundarajaperumal ,Kalalazhar ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்