×

தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்தான் தமிழக முதல்வராக அமருவார் : பாஜ தலைவர் முருகன் பேச்சு

வாலாஜா:தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்தான் தமிழக முதல்வராக அமருவார் என்று வாலாஜாவில் நடந்த கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் முருகன் பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் மாவட்ட பாஜ அணிகள் மற்றும் பிரதிநிதிகள் மாநாடு நேற்று நடந்தது. இதில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் நல்லாட்சியில் நாடு முழுவதும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாஜவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. வரும் தேர்தலில் பாஜ தொண்டர்கள் தீவிர களப்பணியாற்றி அதிகளவில் பாஜ பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை சார்ந்தவர்தான் முதல்வராக அமருவார்.இவ்வாறு அவர் பேசினார்….

The post தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்தான் தமிழக முதல்வராக அமருவார் : பாஜ தலைவர் முருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : nadu ,amaruvar ,national democratic alliance ,baja ,murugan ,WALAJA ,Wallaja ,Amaruwar ,Tamil Nadu ,Chief Minister of ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணி அரசின்...