×

போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

மானாமதுரை: மானாமதுரையில் சாலைகளை விரிவு படுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் செய்து வருகின்றனர்.ஆண்டுதோறும் கார், லாரி உள்ளிட்ட பொது போக்குவரத்து வானங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும்போது குறுகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். முக்கிய சந்திப்புகளில் சிக்னலில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கும்போது பயணிகள் சிரமங்களை சந்திப்பார்கள். இதனை தவிர்க்க ஒவ்வொரு ஆண்டும் வாகனப் போக்குவரத்து குறித்த சென்சஸ் கணக்கெடுப்பு நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடப்பது வழக்கம்.கடந்த சில ஆண்டுகளாக கணக்கெடுப்புகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், மானாமதுரை நகரை ஒட்டிய பகுதிகளில் வாகன போக்குவரத்து காரணமாக நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். குறிப்பாக சோனையா கோயில் முதல் அரசு மருத்துவமனை வரையிலும், கல்குறிச்சி ரயில்வே கேட் முதல் சிவகங்கை பைபாஸ் ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதில் கல்குறிச்சி ரோடு குறுகியதாக இருப்பதால் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும் போது விபத்து அபாயம் நிலவுகிறது.இந்நிலையில் நேற்று முதல் கல்குறிச்சி ரயில்வேகேட் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் தென்னங்கீற்று கொட்டகை அமைத்து கார்,பைக், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கும். இவற்றை கணக்கிட்டு சாலையை அகலப்படுத்தவும் தேவைப்பட்ட இடங்களில் பாலங்கள் அமைக்கவும் முடியும் என்பதால் இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் செய்து வருகின்றனர்….

The post போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Manamadur ,Dinakaran ,
× RELATED மானாமதுரை வங்கியில் கொள்ளை முயற்சி:...