×

அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் பிற மாநிலங்களில் மின்வெட்டு தமிழகத்தில் சீரான மின் விநியோகம்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ ஏ.ெஜ.மணிக்கண்ணன் (திமுக): உளுந்தூர்பேட்டை தொகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு முன்வருமா.அமைச்சர் வி.செந்தில்பாலாஜி: பல மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முதல்வரின் சீரிய வழிகாட்டுதலால், ஏப்ரல் மாதத்தில் 30 நாட்களில் 17 நாட்களும், மே மாதம் 9 நாட்களில் 6 நாட்களும் 16,000 மெகாவாட்டுக்குமேல் உச்சபட்ச மின் தேவையை எந்தவிதத் தடையுமில்லாமல் தமிழ்நாடு மின்சார வாரியம் பூர்த்தி செய்துள்ளது. மேலும், கூடுதல் மின்சாரம், மே மாதம் 1ம் தேதி மற்றும் 8ம் தேதி ஆகிய 2 நாட்களில் 5 லட்சத்து 94 ஆயிரம் யூனிட் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு 12 ரூபாய் என்ற விலையில் எக்சேஞ்ஜ் மூலமாக விற்பனை செய்யப்பட்டு, தமிழகத்தில் எந்தவித மின் தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் முதல்வரின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அரசு புறம்போக்கு இடத்திலுள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கத் தடையில்லா சான்றிதழ் அளிக்கும்பட்சத்தில் மின்சார இணைப்பு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னையின் 200 வார்டிலும் மருத்துவமனைகள்: திருவிக நகர் தொகுதி எம்எல்ஏ தாயகம் கவி(திமுக):  திரு.வி.க. நகர் தொகுதி, மண்டலம்-6, வார்டு எண் 73-ல் அமைந்திருக்கின்ற புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை 24 மணி நேர மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. அதை 100 படுக்கை  கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன்: நகர்ப்புறங்களில் மக்களின் நல வாழ்வை மேம்படுத்துவதற்காகத்தான் முதல்வர் கடந்த 2 நாட்களுக்கு முன்னால் 110 அறிவிப்பின்படி 708 புதிய நகர்ப்புற மருத்துவமனைகளை அறிவித்தார். அதன்படி, சென்னையை பொறுத்தவரை 200 மருத்துவமனைகள் அமைவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு வட்டத்திற்கு ஒரு மருத்துவமனை என பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மன்ற உறுப்பினர் சொல்லியிருப்பதைப் போல, அவர் தொகுதியில் 7 வட்டங்கள் இருக்கிறது என்றால், 7 புதிய மருத்துவமனைகள் மிக விரைவில் வரவிருக்கிறது. அவர் தொகுதியில் புதிதாக 7 மருத்துவமனைகள் வரும்போது, ஏற்கெனவே இருக்கின்ற அந்த 60 படுக்கைகளே போதும் என்கின்ற நிலையில், இந்த 7 புதிய மருத்துவமனைகள் அவர் தொகுதியில் வர இருக்கிறது.ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, விசாரிக்க வசதியாக ஊராட்சி செயலாளருக்கு மேல் உயரதிகாரி நியமனம்: தமிழக சட்டப் பேரவையில் நேற்று  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சட்டமசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கிராம ஊராட்சி செயலாளர், காலமுறை ஊதியத்துடனான நிலையான முழுநேர பணியாளர். ஊரக வளர்ச்சி திட்டங்கள், ஊராட்சி ஆகியவற்றிற்கு இவர் அடித்தளமாக உள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அவரது பங்களிப்பு மிக முக்கியம். சொந்த கிராமங்களிலேயே கிராம ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றுவதால் அவர்கள் பல்வேறு அனுபவங்களை பெற இயலவில்லை.மேலும் அவர்களின் பணியில் திருப்தி ஏற்படாத நிலையில் அவர்களை வேறு கிராம ஊராட்சிக்கு அனுப்ப இயலாத சூழ்நிலை உள்ளது. அதோடு, விதிமீறல்களுக்காக அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும், விசாரணை நடத்துவதற்கும், கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு மேல் யாரும் இல்லை. எனவே, அவருக்கு மேலாக அலுவலர் ஒருவருக்கு அதிகாரம் அளிக்க அரசு கருதுகிறது. அதற்கேற்றபடி தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதாவுக்கு அதிமுக தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.சிதம்பரத்தில் பல்கலை இருக்கும்போது கல்லூரி ேதவையா என்பதை மனசாட்சியுடன் பாருங்கள்: கேள்வி நேரத்தின் போது சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் (அதிமுக): சிதம்பரம் நகரில் மகளிர் கலைக் கல்லூரி துவக்க அரசு முன்வருமா என்றார். அமைச்சர் பொன்முடி: அண்ணாமலை பல்கலைக்கழகம் இருக்கும் சிதம்பரம் நகரில் அதுவும் ரெசிடென்சியல் யுனிவர்சிட்டி ஆக அந்த காலத்திலிருந்தே இருக்கின்ற கல்லூரி. இங்கிருக்கின்ற உறுப்பினர்கள் பலபேர் அந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான். அந்த இடத்தில் உறுப்பினர்  இவ்வாறு கல்லூரியைக் கேட்பது, உண்மையிலேயே இது தேவையா என்பதை மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளும் இருக்கின்றன. முக்கியமாக சிதம்பரம் நகரில் பொறியியல், விவசாயம், பொறியியல் பாடப் பிரிவுகள் பல இருக்கின்றன. ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் பாடப் பிரிவுகள் போன்ற அனைத்து பாடப் பிரிவுகளும் அந்த பல்கலைக்கழகத்தில இருபாலர் முறையில் செயல்பட்டு வருகின்றன. அருகில் உள்ள முட்லூரிலும் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. அதனால் உறுப்பினர்  தயவு செய்து இந்த கோரிக்கை நியாயமானதா என்று நீங்களே யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார். அமைச்சரின் பதிலால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.அரசு புறம்போக்கு நிலங்களில் மின் இணைப்பு ெபற வருவாய்த்துறையில் என்ஓசி கிடைப்பதில் சிரமம்; சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உத்திரமேரூர் க.சுந்தர் (திமுக): அரசு புறம்போக்கு நிலங்களிலே மின்னிணைப்பு வழங்குகின்ற பிரச்னைகளைப்பற்றி, தடையில்லாச் சான்றிதழ் இருந்தால் கொடுக்க முடியுமென்று அமைச்சர் பதிலிலே சொன்னார். ஆனால், வருவாய்த் துறையில் தடையில்லாச் சான்றிதழ் கிடைப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எனவே, பொதுவாக கடந்த காலங்களில் 20 ரூபாய் பத்திரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அந்த மின்னிணைப்பை துண்டித்துக்கொள்ளலாம் என்று அவர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் பெற்று மின்னிணைப்பு கொடுத்திருக்கின்றார்கள். எனவே, அந்த முறையை மாற்றி இமிடியேட் பாண்ட் வகையிலே மின்னிணைப்பை தருவதற்கு அமைச்சர் ஆவன செய்வாரா.அமைச்சர் வி.செந்தில்பாலாஜி: நியாயமான கேள்விதான். இருந்தாலும் நீதிமன்றத்திற்கு செல்கின்றபோது அரசு நீர்நிலைப் புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு அதுபோன்ற நிலைகளை ஏற்படுத்தப்படக்கூடிய முறையில் சட்டச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த இடங்களில் அவர்களது தொகுதியில் அதுபோன்ற மின்னிணைப்புகள் இல்லாமல் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு சொன்னால், அது எந்த வகை நிலைப்பாட்டினுடைய வகைகளை அறிந்து அதற்கேற்றவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்….

The post அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் பிற மாநிலங்களில் மின்வெட்டு தமிழகத்தில் சீரான மின் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Tamil Nadu ,Ulundurpet ,MLA ,A.J. Manikannan ,DMK ,Assembly ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...