×

சென்னையில் பைக் மீது லாரி மோதி விபத்து: நண்பனை காப்பாற்ற கூச்சலிட்டும் கண்டுகொள்ளாத மக்கள்

சென்னை: சென்னை குரோம்பேட்டையில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ஆந்திராவை சேர்ந்த ஃபனிந்திரா மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, குரோம்பேட்டை சிக்னலில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதில், ஃபணிந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நண்பனை மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்ல, உடனிருந்த நண்பர் விஷ்ணு, வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளார். எனினும், யாரும் உதவிட முன்வராததால், அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த  குரோம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலசந்தர், சிறப்பு காவல்படை இரண்டாம்நிலை காவலர் ராஜு ஆகியோர், சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரை மீட்டு, தங்களது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்….

The post சென்னையில் பைக் மீது லாரி மோதி விபத்து: நண்பனை காப்பாற்ற கூச்சலிட்டும் கண்டுகொள்ளாத மக்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chrompettai, Chennai ,Phanindra ,Andhra Pradesh ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...