×

ஒடவும் முடியாது ஒழியவும் முடியாது: விமர்சனம்

திரைப்படம் உருவாக்குவதற்காக தயாரிப்பாளரை தேடி அலையும் நண்பர்கள் சத்தியமூர்த்தி, விஜயகுமார், கோபி, சுதாகர். பள்ளி மாணவர்கள் இருவர். தனது கணவனுக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் இருக்கும் பெண் மற்றும் கள்ளக்காதலன். ஐடி கம்பெனியில் பணியாற்றும் ஹரிஜா, யாஷிகா ஆனந்த். இவர்கள் அனைவரும் ஆலயம் என்ற தியேட்டரில் ஓடும் ‘வாங்க அங்கிள் விளையாடலாம்’ என்ற படத்தைப் பார்க்க செல்கின்றனர். அப்போது அங்குள்ள அமானுஷ்ய சக்தி அவர்களை பயமுறுத்துகிறது. இதனால், அவர்களால் அந்த தியேட்டரை விட்டு வெளியேற முடியாத நிலை. கடைசியில் அவர்கள் அமானுஷ்யத்திடம் இருந்து தப்பித்து தியேட்டரை விட்டு வெளியேறினார்களா? அமானுஷ்ய சக்தி யார்? அதற்கு ஏன் இந்த நிலை என்பது மீதி கதை.

யூடியூப் மூலம் பிரபலமானவர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். நடித்தவர்கள் அனைவரும் வசனங்களை ஒரே மாடுலேஷனில் ஒப்பிப்பதில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முகபாவனைகளில் கூடுதல் அக்கறை செலுத்தி இருக்க வேண்டும். என்றாலும், அவர்களின் காமெடி ஆங்காங்கே நன்கு ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. 1993ல் தொடங்கி தியேட்டருக்குள் நுழையும் வரை திகில் எஃபெக்ட் கொடுத்துள்ளனர். வில்லத்தனம் நிறைந்த தயாரிப்பாளராக வரும் முனீஷ்காந்த், அவரது மனைவி மதுமிதா, இயக்குநர் சொன்ன மாதிரி நடித்துள்ளனர்.

ஹரிஜா, யாஷிகா ஆனந்த் ஆகியோருக்கு சற்று முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். ஜார்ஜ் மரியான், ரித்விகா நடிப்பு வழக்கம்போல். படத்தில் காமெடி பேய்கள் இடம்பெற்றுள்ளதால், அதிக பயம் ஏற்படவில்லை. கவுஷிக் கிரிஷ் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. ஜோஸ்வா ஜே பெரஸ் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு ஏற்ப நன்கு பயணித்துள்ளது. ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். படத்தின் தலைப்பிலேயே நாசூக்காகச் சொல்லிவிட்டார் என்பதால், ஓடவும் முடியவில்லை ஒளியவும் முடியவில்லை.

The post ஒடவும் முடியாது ஒழியவும் முடியாது: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sathyamoorthy ,Vijayakumar ,Kobi ,Sudkar ,Harija ,Yashika Anand ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு