திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பலத்த சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தரையோடு சாய்ந்ததால் விவசாயிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. அப்போது சுழற்றி அடித்த சூறைக்காற்றால் 2-ம் போக விளைச்சலில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் பலத்த சேதமடைந்தன. ஏற்கெனவே ஆடிப்பட்டதின் நடவு செய்த நெற்கதிர்கள் தொடர்மழையால் பெருத்த நஷ்டம் கொடுத்த நிலையில், மீண்டும் அறுவடையாக தயாரான நெல்மணிகள் தறியில் சாய்த்துள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழ்நாடு அரசு பொற்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பயிர் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். …
The post திருவண்ணாமலை செங்கம் அருகே கனமழையுடன் கூடிய சூறைக்காற்றால் தரையோடு சாய்ந்த நெற்கதிர்கள்: வேதனையில் விவசாயிகள் appeared first on Dinakaran.
