×

ஆவடியில் முப்பெரும் விழா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் 690 கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள், திமுக முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா ஆவடி தனியார் திருமணமண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.  இதில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, கட்டுமான நலவாரிய தலைவர் பொன்.குமார், நரிக்குறவர் மக்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் 690 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கமல், கண்ணன், யுவராஜ், பொறியாளர் ஜெகதீசன்,  ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ராஜேந்திரன், யுவராஜ், துளசிங்கம், சக்திவேலன் மற்றும் கட்டுமான பணி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்….

The post ஆவடியில் முப்பெரும் விழா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tribhar Festival ,Aavadi ,Minister ,Nasser ,S.M. Nasar ,Chief Minister ,tri-day festival ,
× RELATED சென்னை பட்டாபிராம் அருகே வைக்கோல்...