×

குழந்தைகள் கடத்தலை தடுக்க வழி சொல்லும் முடக்கறுத்தான்

சென்னை: வயல் மூவிஸ் சார்பில் சித்த மருத்துவர் கே.வீரபாபு தயாரித்து எழுதி இயக்கி, பின்னணி இசை அமைத்து நடித்திருக்கும் படம், ‘முடக்கறுத்தான்’. மற்றும் மஹானா சஞ்சீவி, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன், மயில்சாமி, சாம்ஸ் நடித்துள்ளனர். அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, சிற்பி இசை அமைத்துள்ளார். பழனிபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கே.வீரபாபு பேசுகையில், ‘குழந்தைகளை கடத்திச்சென்று, பிறகு அவர்களை சாலைகளில் பிச்சை எடுக்க வைக்கும் சமூக விரோத கும்பலை வேரோடு அழிக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளோம்’ என்றார். சமுத்திரக்கனி பேசும்போது, ‘பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது கவனத்தைச் செலுத்தாமல், பணம் ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருப்பதால், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை இப்படம் விவரிக்கிறது’ என்றார். ‘முடக்கறுத்தான்’ படம் வரும் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வருகிறது.

The post குழந்தைகள் கடத்தலை தடுக்க வழி சொல்லும் முடக்கறுத்தான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Siddha ,Doctor ,K. Weerababu ,MAHANA SANJEEVI ,SAMUTHIRAKANI ,SUPER SUPERARAYAN ,MAYILSAMI ,SAMS. Arul Selvan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆவடி சித்த மருத்துவர் மற்றும் அவரது...