×

கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் ஸ்ரீ சக்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைபந்தயம் நடைபெற்றது. போட்டியில் மதுரை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு. மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.நடுமாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. நடுமாட்டிற்கு போகவர 8 மைல் தொலைவும், கரிச்சான் மாட்டிற்கு 6 மைல் தொலைவும் பூஞ்சிட்டு மாட்டிற்கு 5 மைல் தொலைவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியில் கலந்து கொண்ட மாடுகள் பந்தய இலக்கை நோக்கி ஒன்றையொன்று முந்திச்சென்றன. போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்குள் மொத்தம் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும், சிறப்பு கோப்பைகளும் வழங்கப்பட்டன. சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பொதுமக்கள் பந்தையத்தை கண்டு ரசித்தனர். 50க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஏம்பல் கிராமம்: அரிமளம் அருகே கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.காலை 6 மணி அளவில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என மூன்று பிரிவாக நடத்தப்பட்டது.பெரிய மாடு பிரிவில் 5 வண்டிகள் கலந்து கொண்ட நிலையில் முதல் பரிசை கோ.வேலங்குடி சோலையன், 2ம் பரிசு ஆட்டுக்குளம் காந்தி, 3ம் பரிசு கருப்பூர் வீரையா, 4ம் பரிசு அம்மன்பேட்டை செல்வம் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன.நடுமாடு பிரிவில் 6 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு நல்லாங்குடி முத்தையா, 2ம் பரிசு பொய்கைவயல் முத்துக்கருப்பர், 3ம் பரிசு ஏம்பல் சுப்ரமணி, 4ம் பரிசு கருப்பூர் வீரையா, முத்துப்பட்டி முனியாண்டி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.இறுதியாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 11 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை ஏரியூர் விஜய வேல், 2ம் பரிசு கொட்டானிபட்டி வர்னிஷ் கார்த்திக், 3ம் பரிசு பரமந்தூர் குமார், கப்பலூர் முத்து, 4ம் பரிசு திருப்புனவாசல் சுப்பையா ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயமானது ஏம்பல்- புதுக்கோட்டை சாலையில் நடைபெற்ற நிலையில் சாலையின் இருபுறமும் திரளானோர் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்….

The post கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Bullock cart elkai ,temple kumbabhishekam ,Pudukottai ,Bullock cart ,Sri ,Sakthivinayakar ,Amarasimendrapuram ,Aranthangi, Pudukottai district ,Bullock cart race on ,
× RELATED அரிமளம் அருகே கோயில் திருவிழாவை...