×

வன்முறை எதிரொலி: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு; துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம்

கொழும்பு:  இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 7 மணி வரை ஊரடங்கை நீட்டித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முப்படையினருக்கு அனுமதி வழங்கி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடடில் போராட்டக்காரர்கள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், வன்முறையை கைவிடுமாறும் அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ட்வீட் செய்துள்ளார். இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைக்கப்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். …

The post வன்முறை எதிரொலி: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு; துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,Dinakaran ,
× RELATED இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை...