×

வரும் 18ம் தேதி ஆதி – நிக்கி கல்ராணி காதல் திருமணம்

சென்னை: பல மொழிப் படங்களில் நடித்து வரும் ஹீரோ ஆதி, ஹீரோயின் நிக்கி கல்ராணி இருவரும் தமிழில் வெளியான ‘யாகாவாராயினும் நா காக்க’, ‘மரகத நாணயம்’ ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போது அவர்கள் காதலிக்க தொடங்கினர். இதையடுத்து இருவீட்டு பெற்றோரும் கலந்து பேசி, அவர்கள் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டினர். இந்நிலையில், வரும் 18ம் தேதி இரவு 11.20 மணியளவில் ஆதி- நிக்கி கல்ராணி திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அவர்கள் திருமணம் நடக்கிறது. ‘எனக்கும், நிக்கி கல்ராணிக்கும் வெவ்வேறு படங்களின் ஷூட்டிங் இருப்பதால், வரும் ஆகஸ்ட் மாதம் ஹனிமூன் செல்ல தீர்மானித்துள்ளோம்’ என்றார் ஆதி….

The post வரும் 18ம் தேதி ஆதி – நிக்கி கல்ராணி காதல் திருமணம் appeared first on Dinakaran.

Tags : Adi-Nikki Kalrani ,Chennai ,Hero ,Adi ,Niki Kalrani ,Adi - Nikki Kalrani ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...