நாகர்கோவில் : உக்ரைன் போரால் நாடு திரும்பிய மாணவர்களின் மருத்துவ படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவிலில் நேற்று மாலை நடந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து உக்ரைனில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மருத்துவம் படித்து வந்தனர். போரின் காரணமாக அனைவரும் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது அவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் இருந்து 1800 மாணவ, மாணவிகள் உக்ரைனில் படித்து வந்தனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 112 பேர். இவர்களின் மருத்துவப் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பி உள்ளனர். இந் நிலையில் உக்ரைனில் படித்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ராமநாதன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். ஆலோசனை கூட்டத்தில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போரினால் உக்ரைனின் தவித்த மாணவ,மாணவிகளை மீட்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ மருத்துவ படிப்பை தொடர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 15ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது….
The post உக்ரைன் போரால் நாடு திரும்பிய மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
