×

வண்ணார்பேட்டையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்-விரைவில் சீரமைக்க மக்கள் கோரிக்கை

நெல்லை :  நெல்லை மாநகராட்சி, 11வது வார்டுக்கு உட்பட்ட வண்ணார்பேட்டை சாலைத்தெரு நுழைவு பகுதியில் பிரதான பைப்லைனில் ஏற்பட்ட உடைப்பு உடனடியாக சீரமைக்கப்படவில்லை. இதனால் அதில் இருந்து வெளியேறும் குடிநீரானது ஒரு வாரத்திற்கு மேலாக வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பிரதான குடிநீர் குழாய் மூலம் வண்ணார்பேட்டை பகுதியில் சாலைத் தெரு, எட்டுத் தொகை தெரு, சிலப்பதிகாரத் தெரு, வளையாபதி தெரு உள்ளிட்ட அருகில் உள்ள பிற தெருக்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் சப்ளையாகிறது. கோடை காலமான அக்னி நட்சத்திர காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், இவ்வாறு குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்….

The post வண்ணார்பேட்டையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்-விரைவில் சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vannarpet ,Nellai ,Vannarpettai ,Nellai Corporation ,11th Ward ,Vannarpeti ,Dinakaran ,
× RELATED நில மோசடி புகார்: பெண் காவலர், அவரது கணவர் கைது