×

போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் கனமழை சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் முறிந்து நாசம்: மின்னல் தாக்கி 2 ஆடு பலி; 6 மின்கம்பங்கள் சேதம்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் மின்னல் தாக்கியதில் 2ஆடுகள் உயிரிழந்தன.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் கோடை வெயில் சட்டெரித்து வரும் நிலையில்  மாலை மற்றும் இரவு நேரங்களில் சூறைக்காற்றுடன் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாலை 5.30மணியளவில் பெய்ய தொடங்கிய மழை 2மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு சந்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் கூட்ரோடு பகுதியில் 2 புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இன்று காலை அந்த மரங்களை அகற்றும் பணி நடந்தது.மாக்கிரெட்டிகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மழை பெய்த போது  வீட்டின் முன் கட்டியிருந்த 2 ஆடுகள் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தன. இதேபோல் சூறைக்காற்றுக்கு போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தோப்புகளில் உள்ள மாமரங்களில் இருந்து 25டன்  மாங்காய்கள் உதிர்ந்து நாசமானது. பூங்கம்பட்டி பகுதியில் 6 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதில், பழனியம்மாள் என்பவரின் வீட்டின் அருகேயுள்ள மின்கம்பம் அவரின் ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. இதில்  ஓடுகள் சேதமடைந்தது. ஆனால் வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பின்னர் உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இன்று காலை சேதமான மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல், ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் சூறைககாற்றுடன் மழை பெய்தது. காரப்பட்டு, முத்தாகவுண்டனூர், வளத்தானூர், வடுகனூர், சின்னக்காரப்பட்டு, ஊமையனூர் என சுற்றுவட்டார பகுதிகளில்  ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் முறிந்து விழுந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்): ஊத்தங்கரை 33.60, பாரூர் 31.40, நெடுங்கல் 19, போச்சம்பள்ளி 15.40, ஓசூர் 14, அஞ்செட்டி 5.40, தேன்கனிக்கோட்டை 5, தளி 5, சூளகிரி 4, பெணுகோண்டாபுரம் 3.20 என மொத்தம் 136மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷண நிலை நிலவி வருகிறது. …

The post போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் கனமழை சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் முறிந்து நாசம்: மின்னல் தாக்கி 2 ஆடு பலி; 6 மின்கம்பங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Pochampalli, Uthankar ,Pochampalli ,Pochampalli, Uthankara ,Pochampalli, Uthankaram ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...