- சென்னை
- ஜே. எஸ்எம்.
- ஏஆர் ஜஃபர் சாதிக்
- இர்பன் மாலிக்
- பேரரசர் என்ட
- வசந்தா ரவி
- நயன்தாரா
- சென்னை டாக்கீஸ்
- இந்திரா
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்பான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு ‘இந்திரா’ என்று பெயரிட்டுள்ளனர். நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஐரா’, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி நெட்பிளிக்சில் வெளியான ‘நவரசா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார்.
வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது இப்படத்திற்கு ‘இந்திரா’ என தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
The post வசந்த் ரவி நடிக்கும் இந்திரா பர்ஸ்ட் லுக் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.