×

ஆலன் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை: 3 எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிவா.ஆர் தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிக்கும் படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்.இது குறித்து சிவா. ஆர் கூறும்போது, ‘தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது. அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஓர் எதிர்பாராத நிகழ்வு, அவனின் காதல், 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம். எட்டுத்தோட்டாக்கள் நாயகன் வெற்றி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த தபேயா மதுரா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

The post ஆலன் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Allen ,CHENNAI ,Alan ,Shiva.R ,3S Pictures ,Vijay Sethupathi ,R ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...