×

தமிழக பாஜ புதிய நிர்வாகிகள் பட்டியல்: நடிகை காயத்திரி ரகுராம் பதவி பறிப்பு

சென்னை: தமிழக பாஜவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் நடிகை காயத்திரி ரகுராமின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக பாஜ சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  கட்சியின் மாநில துணை தலைவர்களாக சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, நாராயணன் திருப்பதி, டால்பின் தர், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநில பொதுச் செயலாளர்களாக முருகானந்தன், ராம நிவாசன், பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், கார்த்தியாயினியும், மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், கே.வெங்கடேசன், சுமதி வெங்கடேசன், மலர்கொடி, மீனாட்சி, வினோஜ் பி.செல்வம், சரவணகுமார், மீனாதேவ், அஸ்வத்தாமன், அனந்த பிரியா, பிரமிளா சம்பத், சதீஷ்குமார், சூர்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகரும், இணை பொருளாளராக சிவ சுப்பிரமணியனும், அலுவலக செயலாளராக சந்திரனும், மாநில மகளிர் அணி தலைவராக உமாரதி, இளைஞர் அணி தலைவராக ரமேஷ் சிவா, விவசாய அணி தலைவராக நாகராஜ், எஸ்சி அணி தலைவராக தடா பெரியசாமி, எஸ்டி அணி தலைவராக சிவபிரகாசம், சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரண், ஓபிசி அணி தலைவராக சாய் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மாநில செய்தி தொடர்பாளராக நரசிம்மன், கார்வேந்தன், ஆதவன் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில தலைமை அலுவலக பொறுப்பாளராக லோகநாதன், மாநில மீனவர் பிரிவு தலைவராக முனுசாமியும், நெசவாளர் பிரிவு தலைவராக பாலமுருகனும், கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக பெப்சி சிவக்குமாரும், கல்வியாளர் பிரிவு தலைவராக தங்க கணேசனும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு தலைவராக கர்னல் ராமனும், அரசு தொடர்பு பிரிவு தலைவராக பாஸ்கரனும், சமூக ஊடக பிரிவு தலைவராக நிர்மல்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரசார பிரிவு தலைவராக குமரி கிருஷ்ணன், வழக்கறிஞர் பிரிவு தலைவராக வணங்காமுடி, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவராக ராதாகிருஷ்ணன், ஒன்றிய அரசின் நலத்திட்டங்களுக்கான பிரிவு தலைவராக லோகநாதன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவராக அமர்பிரசாத் ரெட்டி, தரவுத்தள மேலாண்மை பிரிவு தலைவராக மகேஷ்குமார், ஊடக பிரிவு தலைவராக ரெங்கநாயகலு, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு தலைவராக ஆதித்யா என்ற கோகுல கிருஷ்ணன், கூட்டுறவு பிரிவு தலைவராக மாணிக்கம், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவராக சோழன் பழனிச்சாமி, வர்த்தக பிரிவு தலைவராக ராஜகண்ணன், மருத்துவ பிரிவு தலைவராக பிரேம்குமார், தொழில் துறை பிரிவு தலைவராக கோவர்தனன், பிற மொழி பிரிவு ஜெயக்குமார், விருந்தோம்பல் பிரிவு தலைவர்களாக ராத்மா சங்கர், கந்தவேல் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக சிவகாமி பரமசிவம், ராஜா, ரமேஷ், மோகன் ராஜூலு, சர்வோத்தமன், நடேசன், தணிகாசலம், பிச்சாண்டி, நரசிம்மன், பாலகிருஷ்ணன், பாஸ்கரன், ஆசிம் பாஷா, ராமசாமி, அண்ணாதுரை, முருகேசன், மனோகரன், பழனிச்சாமி, பாயிண்ட் மணி, சண்முகம், கர்னல் பாண்டியன், செல்லக்குமார், திருமலைச்சாமி, பாலாஜி சிவராஜ், ராமசுப்பு, பார்வதி நடராஜன், சித்தார்த், செல்லபாண்டியன், வரதராஜன், அம்பேத்ராஜன், ராமலிங்கம், மகாலட்சுமி, கனகராஜ், பார்த்தசாரதி, சண்முகராஜ், கனகராஜ், புரட்சி கவிதாசன், கட்டளை ஜோதி, பொன். விஜயராகவன் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பார்வையாளர்களாக கன்னியாகுமரி-மீனாதேவ், தூத்துகுடி தெற்கு-சசிகலா புஷ்பா, தூத்துக்குடி வடக்கு- கட்டளை ஜோதி, திருநெல்வேலி- நீலமுரளி யாதவ், தென்காசி-ராஜகண்ணன், ராமநாதபுரம்- நாகேந்திரன், சிவகங்கை-சண்முகராஜ், புதுக்கோட்டை- புரட்சி கவிதாசன், விருதுநகர் கிழக்கு- வெற்றிவேல், விருதுநகர் மேற்கு-ராம நிவாசன், மதுரை நகர்- கதளி நரசிங்க பெருமாள், மதுரை புறநகர்- சரவணகுமார், திண்டுக்கல் கிழக்கு-மகாலட்சுமி, திண்டுக்கல் மேற்கு-ராஜபாண்டியன், தேனி- பார்த்தசாரதி, திருச்சி நகர்- சிவசுப்பிரமணியம், திருச்சி புறநகர்-லோகிதாஸ், கரூர்-சிவசுப்பிரமணியன், பெரம்பலூர்-இல.கண்ணன், அரியலூர்-சந்திரசேகரன், தஞ்சாவூர் தெற்கு- முரளி கணேசன், தஞ்சாவூர் வடக்கு- இளங்கோ, திருவாரூர்- பேட்டை சிவா, நாகப்பட்டினம்-வரதராஜன், மயிலாடுதுறை- அண்ணாமலை, கடலூர் கிழக்கு-கலிவரதன், கடலூர் மேற்கு- அஸ்வத்தாமன், விழுப்புரம்- மீனாட்சி, ராணிப்பேட்டை- வெங்கடேசன், வேலூர்-நரேந்திரன், திருப்பத்தூர்-பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி- ஏ.ஜி.சம்பத், திருவண்ணாமலை தெற்கு-ராஜ்குமார், திருவண்ணாமலை வடக்கு-டால்பின் ஸ்ரீதர், கிருஷ்ணகிரி கிழக்கு-முரளிராஜ், கிருஷ்ணகிரி மேற்கு- நரசிம்மன், தர்மபுரி-வெங்கடேசன், செங்கல்பட்டு- நிர்மல்குமார், காஞ்சிபுரம்-பாஸ்கர், திருவள்ளூர் கிழக்கு-அனந்த பிரியா, திருவள்ளூர் மேற்கு- லோகநாதன், தென்சென்னை- கராத்தே தியாகராஜன், சென்னை கிழக்கு- ராஜா, மத்திய சென்னை கிழக்கு- ரவிச்சந்திரன், மத்திய சென்னை மேற்கு- சுமதி வெங்கடேசன், சென்னை மேற்கு- பாஸ்கர், வடசென்னை கிழக்கு- பால்கனகராஜ், வடசென்னை மேற்கு- சதீஷ்குமார், சேலம் நகர்- முருகேசன், சேலம் கிழக்கு- அண்ணாதுரை, சேலம் மேற்கு- ராமலிங்கம், நாமக்கல்- வி.பி.துரைசாமி, ஈரோடு தெற்கு- பாயிண்ட் மணி, ஈரோடு வடக்கு- பழனிச்சாமி, திருப்பூர் தெற்கு- மலர்கொடி, திருப்பூர் வடக்கு- செல்லகுமார், கோவை நகர்- நாகராஜ், கோவை தெற்கு- மோகன் மந்திராச்சலம், கோவை வடக்கு- கனகசபாபதி, நீலகிரி நந்தகுமார்.சென்னை மேற்கு மாவட்ட தலைவராக மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினராக சென்னை சிவா நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலையுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த கலை இலக்கிய பிரிவு செயலாளராக இருந்த நடிகை காயத்திரி ரகுராம், ஊடக பிரிவு தலைவர் பிரசாத் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜ இளைஞரணி தலைவராக இருந்த வினோஜ் பி.செல்வம் தனக்கு மாநில பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவருக்கு சாதா ரணமாக நிர்வாகி களுக்கு அளிக்கப்படும் மாநில செயலாளர் பதவியே கிடைத்துள்ளது. அதேநேரத்தில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன….

The post தமிழக பாஜ புதிய நிர்வாகிகள் பட்டியல்: நடிகை காயத்திரி ரகுராம் பதவி பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Baja ,Kayatri Raguram ,Chennai ,Anamalai ,Tamil ,Nadu Baja ,Kayatri Rakuram ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...