×

தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம்

நெல்லை: தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. நெல்லை  தச்சநல்லூரில் உள்ள பாரம்பரியமிக்க நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக  நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு  வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது.விழாவின் சிகரமான வருடாபிஷேகம் மற்றும் தேரோட்டம் இன்று மே 7ம் தேதி நடந்தது. காலை 10.40 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நடந்தது. கொளுத்திய வெயிலை  பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக காலை 7 மணிக்கு மேல் வருடாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினரும், ஸ்ரீ உலகம்மன் பக்த சேவா குழுவினரும் ெசய்திருந்தனர்….

The post தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Dachnallur ,Nelleyapar ,Dachanallur ,Gandhimathi ,Paddy Dachanallur ,Dachnallur Nelleyapar ,
× RELATED நெல்லையப்பர் கோவிலில் காணிக்கை...