சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் சாலையோரம் பஸ்சை நிறுத்தியதால் 40 பயணிகள் தப்பினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது. நெல்லையில் இருந்து சாத்தான்குளத்திற்கு அரசு பஸ் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டுச் சென்றது. டிரைவராக நெல்லை அருகே ரஸ்தாவை சேர்ந்த மீசை முருகேச பாண்டியன் (59) என்பவரும், கண்டக்டராக சுடலைமுத்துவும் பணியில் இருந்தனர். பஸ்சில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் அடுத்த பனைக்குளம் பகுதியில் செல்லும்போது டிரைவர் மீசை முருகேச பாண்டியனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட அவர், பஸ்சை ஓரமாக நிறுத்தினார். பின்னர் பஸ்சில் பயணம் செய்த மற்றொரு அரசு பஸ் டிரைவரான மாரியப்பன், பஸ்சை இயக்கி சாத்தான்குளம் பஸ் நிலையம் கொண்டு சென்றார். பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் மீசை முருகேச பாண்டியன், சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்….
The post சாத்தான்குளம் அருகே ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி டிரைவர் பரிதாப பலி: 40 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.
