×

விமர்சனம்

 

விராஜ் (நானி), புகைப்படக் கலைஞர். அவர் தனது 6 வயது மகள் மஹியை (பேபி கியாரா கன்னா) தனியாக கவனித்துக்கொள்கிறார். மஹி, விராஜிடம் தன் அம்மாவைப் பற்றி எத்தனை முறை கேட்டாலும், அவளை பற்றி பேச மறுக்கிறார். கடைசியாக, மஹி முதல் ரேங்க் எடுத்தால் மட்டுமே தன் மனைவியைப் பற்றி பேச விராஜ் சம்மதிக்கிறான். மஹி அதைச் செய்கிறாள், ஆனால் விராஜ் சொன்னதைக் காப்பாற்றவில்லை. இதனால் கோபமடைந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறுகிறார். யஷ்னா (மிருணாள் தாக்கூர்) மஹியை விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார். விராஜ் மற்றும் மஹியின் வாழ்க்கையை யாஷ்னா எப்படி மாற்றுகிறார் என்பதுதான் படம். ஹாய் நான்னா, நாடகம் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையில் நல்ல கதைக்களம் கொண்ட படம். மிருணாள் தாக்கூரின் கேரக்டர், படத்தின் இதயம் மற்றும் ஆத்மா. அது நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் நடிகை சீதா ராமம் படத்திற்குப் பிறகு மீண்டும் தனது ஸ்கிரிப்ட் தேர்வில் ஈர்க்கிறார். விராஜ் போன்ற கதாபாத்திரங்கள் நானிக்கு பூங்காவில் ஓய்வு எடுப்பதுபோல். அசால்ட்டாக செய்கிறார். மேலும் நடிகர் மீண்டும் தனது இயல்பான நடிப்பால் இதயங்களை உருக்குகிறார். படத்தில் கதாநாயகியின் அம்மாவிடம் நானி பேசும் காட்சி, மனதை கொள்ளை அடிக்கிறது. நானி எத்தகைய இயல்பான நடிப்பாளர் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். மிருணாளுடனான அவரது கெமஸ்ட்ரி அபாரம்.

குழந்தை கியாரா கன்னா தனது பாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளார். தன்னம்பிக்கையுடன் தனது வசனங்களை பேசி ஈர்க்கிறார். படத்தில் ஒடியம்மா பாடலைத் தவிர, சொல்லும்படி பாடல்கள் இல்லை. ஆனாலும் ஹேஷாம் அப்துல் வஹாப் பின்னணி இசையில் லயிக்க வைக்கிறார். காதல் கதையின் ஆரம்ப பகுதிகள் சிறப்பாக இல்லை மற்றும் கொஞ்சம் வழக்கமானவை. இரண்டாம் பாதியிலும் படம் இழுவையாக செல்வது சற்று சோர்வை தருகிறது. படம் ஏ சென்டர் பார்வையாளர்களை நன்றாக ஈர்க்கும், ஆனால் வெகுஜனங்களுக்கு அப்படி இருக்காது. ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸின் காட்சிகள் பிரமாதம். எடிட்டிங் ஓகே. இயக்குநரான ஷோரியுவ், தனது முதல் படத்திலேயே ஒரு கண்ணியமான காதலை சொல்கிறார். படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

The post விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Viraj ,Nani ,Mahi ,Baby Kiara Khanna ,Mahi… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மீண்டும் இணைந்த தசரா கூட்டணி