×

கண்ணகி

 

சென்னை: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் நடித்துள்ள படம், ‘கண்ணகி’. யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார். ஸ்கைமூன் என்டர்டெயின்மெண்ட், இ5 என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளன. ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். படத்தில் வெவ்வேறு சூழலில் வசிக்கும் 4 பெண்களின் கதைகள் இடம்பெறுகின்றன. பலமுறை பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தும் திருமணம் கைகூடாமல் இருக்கும் அம்மு அபிராமி, கணவனின் வற்புறுத்தலால் விவாகரத்துக்கு விண்ணப்பித்து நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் வித்யா பிரதீப், திருமண உறவின் மீது நம்பிக்கையின்றி லிவிங் டூகெதரில் வாழ விரும்பும் ஷாலின், தன் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கருவிலேயே கலைக்க நினைத்து; பிறகு அது நடக்காமல் போனதால் விரக்தியில் இருக்கும் கீர்த்தி பாண்டியன் ஆகியோரைப் பற்றிய கதையுடன் படம் உருவாகியுள்ளது.
நான்கும் தனி கதை என்றாலும், கடைசியில் அனைத்தும் ஒரு புள்ளியில் இணைவது போன்ற வித்தியாசமான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

The post கண்ணகி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Keerthy Pandian ,Ammu Abhirami ,Vidya Pradeep ,Shaolin ,Yashwant Kishore ,Skymoon Entertainment ,E5 Entertainment ,Shaan Rahman ,Ramji ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...