×

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல்மூடைகள்: கண்டும் காணாமல் அதிகாரிகள்

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் வாங்கிய நெல் மூடைகள் மழையில் நனைந்து வருகின்றன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் பள்ளதாக்கில், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, குச்சனூர், உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், உத்தமபாளையத்தில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது, உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் முதல் போக நெல் அறுவடை நடந்து வருகிறது. இதனையடுத்து அறுவடை செய்த நெல்லை ஆயிரக்கணக்கான மூடைகளில் சேமித்து கொள்முதல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த நெல் மூடைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது இப்பகுதியில் பெய்து வரும் மழைக்கு நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகின்றன. நெல்மூட்டைகளை பாதுகாப்பான பகுதியில் வைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘நெல்முடைகள் திறந்த வெளியில் கிடக்கின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் இந்த கொள்முதல் நிலையத்திற்கு வருவதில்லை. இதனை கண்டும், காணாமல் உள்ளனர்’’ என்று ெதரிவித்தனர்….

The post அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல்மூடைகள்: கண்டும் காணாமல் அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Utthampalayam ,Dinakaran ,
× RELATED உத்தமபாளையம் அருகே போர்வெல்...