×

கமல்ஹாசன் நடித்து வெளியான ‘ஆளவந்தான்’ திரைப்படம் 22 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ்

சென்னை: கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவும், வில்லனாகவும் இரண்டு வெவ்வெறு தோற்றங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார். உளவியல் சிக்கலைப்பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், படத்தை உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டமிட்டிருந்தார். இதன் அடிப்படையில் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் (டிச.02) மாலை 5.03க்கு வெளியானது. இந்நிலையில் டிசம்பர் 8-ம் தேதி நேற்று ‘ஆளவந்தான்’ திரைப்படம் உலகம் முழுவதும் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியாகி பொதுமக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

The post கமல்ஹாசன் நடித்து வெளியான ‘ஆளவந்தான்’ திரைப்படம் 22 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : KAMALHASAN ,Chennai ,Kamal Hassan ,Suresh Krishna ,Kalapiuli S. ,Thanu ,V ,Creations ,Raveena Tandon ,Manisha Koirala ,Saratbaba ,Anuhasan ,Fatima ,Kamal Hassan's' ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக...