×

சமையல் கற்ற நயன்தாரா

ஷங்கர் உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ், ஜெய் நடித்துள்ள படம், ‘அன்னபூரணி’. இதில் ‘ராஜா ராணி’ படத்துக்குப் பிறகு நயன்தாரா, சத்யராஜ், ஜெய் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்துள்ளார்.

நாளை திரைக்கு வரும் இப்படம் குறித்து நிலேஷ் கிருஷ்ணா கூறுகையில், ‘இப்படத்தில் நயன்தாரா செஃப் வேடத்தில் நடித்துள்ளார். இதற்காக பல சமையல் நுணுக்கங்களை முறைப்படி கற்றுக்கொண்டு நடித்தார். சில காட்சிகளின் உண்மைத்தன்மைக்காக, சமையல் செய்யும் காட்சிகள் படமாகும்போது நிஜ சமையல் கலைஞர்களை செட்டுக்கு வரவழைத்தோம்’ என்றார். இப்படம் நயன்தாராவின் 75வது படமாகும்.

The post சமையல் கற்ற நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,Shankar ,Nilesh Krishna ,Sathyaraj ,Jai ,Jay ,Sathyan Sooryan ,Taman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது: கோவை மாநகர சைபர் கிரைம் நடவடிக்கை