×

கோத்தகிரி குஞ்சப்பனையில் காரை தாக்கிய காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

கோத்தகிரி: கோத்தகிரி குஞ்சப்பனையில் காட்டு யானை தாக்கி கார் சேதமானது. இதனால், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளது. பழங்களின் அரசன் எனும் பலா கொத்துக்கொத்தாக காய்த்து தொங்குகிறது. யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக பலா உள்ளது. இதனால், பலா வாசனையை நுகரும் காட்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி படையெடுத்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மேட்டுப்பாளையம்- கோத்தகிரி நெடுஞ்சாலை குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே யானை கூட்டம் சென்றது. அதில் இருந்து பிரிந்த ஒற்றை பெண் யானை சாலையில் உலா வந்தது. அப்போது அந்த வழியே ஒரு கார் வந்தது. இதைப்பார்த்து காட்டு யானை ஆவேசமடைந்து காரை துதிக்கையால் தாக்கியது. இதில், காரின் முன்பக்கம் சேதமானது. இதனையடுத்து உஷாரான கார் டிரைவர் காரை பின்னால் இயக்கி தப்பினார். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அதன்பின்னரும், அந்த யானை சாலையில் சுற்றியது. தகவல் அறிந்ததும் போலீசார் வந்து போக்குவரத்தை நிறுத்தினர். வனத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பின்னர் யானையை வனத்துக்குள் விரட்டினர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,‘‘வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சுற்றுலா பயணிகள் யானைகளை கண்டால் ஆர்வமிகுதியால் போட்டோ, செல்பி எடுக்க கூடாது’’ என்று எச்சரித்துள்ளனர்.மாட்டை தாக்கி கொன்ற யானைகள்தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சஞ்சீவராயன் மலை அடிவாரம் தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி, சஞ்சீவபுரம் கிராமத்திற்குள் நேற்று அதிகாலை, 3 யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். விவசாயி சக்திவேல் (38) வீட்டின் அருகே நின்றிருந்த யானைகள், மாட்டுக்கொட்டைகையில் கட்டியிருந்த ஒரு கறவை மாட்டை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த மாடு இறந்தது. இத்தகவல் கிடைத்து பாலக்கோடு வனத்துறையினர் சென்று, பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர்….

The post கோத்தகிரி குஞ்சப்பனையில் காரை தாக்கிய காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kotagiri Kunjappanai ,Kotagiri ,Kunjapanai, Kotagiri ,Nilgiris… ,Kothagiri Kunjapanai ,Dinakaran ,
× RELATED கோத்தகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தேயிலை மகசூல் அதிகரிப்பு