×

தமிழக வளர்ச்சியின் முதுகெலும்பாக உள்ள தொழிலாளர் நலன் காக்கும் அரசாக திமுக அரசு என்றும் விளங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து செய்தி

சென்னை: தொழிலாளர்கள் தமிழக வளர்ச்சியின் முதுகெலும்பு. அவர்களின் நலன் காக்கும் அரசாக திமுக அரசு என்றும் விளங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே நாள் வாழ்த்துச் செய்தி:சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்று புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1ம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும், அவர்களது உரிமைக்குரலை காதுகொடுத்து கேட்டு, அவற்றை நிறைவேற்றி வைக்கும் அரசாக, திமுக அரசு எப்போதும் விளங்கி வருகிறது.ஒவ்வொரு தொழிலாளரின் எதிர்காலத்தையும் இனிமையாக்கிட, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிட எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றிய கலைஞர்  வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சியும், தொழிலாளர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.திமுக ஆட்சியில்தான் மே நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாள் என்று அறிவிக்கப்பட்டது. கலைஞர் முதன்முதலில் முதலமைச்சராக இருந்தபோதுதான் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. தொழிலாளர் நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. “நேப்பியர் பூங்கா” மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டி தொழிலாளர்களின் உரிமை போர் நினைவூட்டி, போற்றப்பட்டது.அல்லும் பகலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு போனஸ், ஊக்கத்தொகை அளித்தது, விவசாய தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்களை ஏற்படுத்தி, தொழிலாளர்களுக்கு பல்வேறு முத்தான நலத்திட்டங்களையும், தொழிலாளர்களின் உயிர் காக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களையும் வழங்கியது கழக அரசுதான்.தற்போது ஆட்சி பொறுப்பிற்கு வந்து ஓராண்டு நிறைவடையும் முன்பே கடை மற்றும் நிறுவனங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணிபுரியும் இடத்தில் இருக்கை வசதி அளிக்க வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க “தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம் 2021-ஐ நிறைவேற்றி இருக்கிறது. தொழிலாளர்கள் பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே பணி செய்ய வேண்டிய நிலை அகற்றப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் 10,17,481 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, 1,85,660 பயனாளிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.247.49 கோடி அளவில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஒரே நாளில் நானே தலைமையேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக உழைக்கும் மகளிர் தொழிலாளர்கள் தங்குவதற்கு தங்குமிடம் கட்டுவதற்கு உத்தரவிட்டு பெண்ணுரிமைக்கு மகுடம் சூட்டும் அரசாக எனது தலைமையிலான திமுக அரசு விளங்கி வருகிறது என்பதை தொழிலாளர் தோழர்கள் அனைவரும் நன்கு அறிவர்.தொழிலாளர்கள் தமிழகத்தின் – இந்த நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு. அவர்களின் நலன் காக்கும் அரசாக நமது அரசு என்றும் விளங்கும். தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமாகவும், போர்வாளாகவும்” திமுகவும் – திமுக அரசும் எப்போதும் திகழும்! “தொழில் அமைதி” மட்டுமே தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் என்பதை நித்தமும் நெஞ்சில் கொண்டு, தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சி பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் மீண்டும் மே நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மே தின பூங்காவில் முதல்வர் இன்று காலை மரியாதைமே 1ம் தேதி, உழைப்பாளர் தினம். இதையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், திமுக எம்பி, எம்எல்ஏக்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், சென்னை மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் சிற்றரசு, பகுதி கழக செயலாளர் மதன்மோகன், தொமுச பேரவை செயலாளர் மு.சண்முகம், பொருளாளர் கி.நடராஜன், செயலாளர் பொன்னுராம், சு.பத்மநாபன், டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் இராஜன் சாமிநாதன், காஞ்சி பண்டக சாலை தொமுக செயலாளர் கா.செல்வமணி உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான திமுக தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்….

The post தமிழக வளர்ச்சியின் முதுகெலும்பாக உள்ள தொழிலாளர் நலன் காக்கும் அரசாக திமுக அரசு என்றும் விளங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து செய்தி appeared first on Dinakaran.

Tags : Government of Djuga ,Tamil Nadu ,Chief Minister ,BCE ,G.K. Stalin ,Chennai ,Government of Dizhagam ,Djuga Government ,B.C. G.K. Stalin ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்