×

விமர்சனங்கள் தடை மம்மூட்டி கருத்து

கொச்சி: மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்’ என்ற படம் நேற்று திரைக்கு வந்தது. இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசிய மம்மூட்டி, ‘படங்களைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யட்டும். ஒவ்வொருவருக்கும் அவரது கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. அது அவர்களின் சொந்தக் கருத்துக்களாக இருக்க வேண்டும். வெளிப்புற அழுத்தங்களாலோ அல்லது மற்றவர்களின் உந்துதல் காரணமாகவோ விமர்சனங்கள் இருக்கக்கூடாது. ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகை காப்பாற்றிவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. அதுபோல், ஒரு படத்தின் முடிவு என்பது ஆன்லைன் விமர்சனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்றார். ஜியோ பேபி பேசும்போது, ‘இன்றைக்கு பல ஆன்லைன் கன்டன்ட் கிரியேட்டர்கள் உருவாகி விட்டனர். என்னைப் பொறுத்தவரை, நான் ஆன்லைன் சினிமா விமர்சனங்களைப் பொருட்படுத்துவதும் இல்லை. அவர்களுக்கு மதிப்பு அளிப்பதும் இல்லை’ என்றார்.

The post விமர்சனங்கள் தடை மம்மூட்டி கருத்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ban ,Mammootty ,Kochi ,Jyothika ,Jio Baby ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மம்மூட்டிக்கு பரிசளித்த மாற்றுத்திறனாளி ரசிகர்