×

38 மொழிகளில் வெளியாகும் ‘கங்குவா’ திரைப்படம்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’, திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகி வருகிறது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது. கங்குவா திரைப்படம் உலகளவில் 38 மொழிகளில் வெளியாகும். மேலும், ஜமேக்ஸ், 3டி முறையிலும் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் திட்டமிட்டபடி சரியான பாதையில் போனால் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பல்வேறு புதிய கதவுகள் திறக்கும் என்றார்.

The post 38 மொழிகளில் வெளியாகும் ‘கங்குவா’ திரைப்படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Siva ,Suriya ,Disha Patani ,Bobby Deol ,Jagapathi Babu ,Yogi Babu ,Redin Kingsley ,UV Creations ,Studio Green ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டெல்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு!