×

பார்க்கிங் பிரச்னைக்கு என்ன தீர்வு?: ஹரீஷ் கல்யாண்

சென்னை: ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள படம், ‘பார்க்கிங்’. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் கே.எஸ்.சினிஷ் தயாரித்துள்ளார். வரும் டிசம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ஹரீஷ் கல்யாண் கூறியதாவது: இனி வருங்காலத்தில் மிக முக்கியமான பிரச்னையாக விஸ்வரூபம் எடுக்க இருக்கும் பார்க்கிங் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. சொந்தமாக பார்க்கிங் வசதி இல்லாத வாகனங்கள் சாலைகளிலும், ெதருக்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

பல குடும்பங்களைக் கொண்ட சிறிய குடியிருப்புகளில், பார்க்கிங் தொடர்பான பிரச்னைகள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. பார்க்கிங் பிரச்னை என்பது சாதாரண விஷயம் கிடையாது. அது எப்படி வளர்ந்து ஈகோ மோதலாகி, பிறகு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது இப்படத்தின் கரு. நானும் பலமுறை பார்க்கிங் பிரச்னையை சந்தித்துள்ளேன். ஒவ்வொருவரும் இப்படத்துடன் தங்களை இணைத்துக் கொள்வார்கள். திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து, ஐடி கம்பெனியில் பணியாற்றும் இளைஞன் வேடம் ஏற்றுள்ளேன். என் மனைவியாக இந்துஜா நடித்துள்ளார்.

 

The post பார்க்கிங் பிரச்னைக்கு என்ன தீர்வு?: ஹரீஷ் கல்யாண் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Harish Kalyan ,Chennai ,Induja ,MS Bhaskar ,Ramkumar Balakrishnan ,KS Sinish ,Soldiers Factory ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இயக்குனர் மீது திகங்கனா சூர்யவன்ஷி அவதூறு வழக்கு