×

‘லோகி’யாக ஷாருக்கான் நடிக்க வேண்டும் டாம் ஹிடில்ஸ்டன்

மும்பை: லோகி கதாபாத்திரத்தின் பாலிவுட் வெர்ஷனில் ஷாருக்கான் நடித்தால் மிகச்சரியாக இருக்கும் என்று, நடிகர் டாம் ஹிடில்ஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளார். மார்வெல் தயாரிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான வெப்தொடர், ‘லோகி’. இத்தொடரின் 2வது சீசன் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதில் லோகி கேரக்டரில் டாம் ஹிடில்ஸ்டன் நடித்துள்ளார். 6 எபிசோடுகள் கொண்ட இத்தொடர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில், டாம் ஹிடில்ஸ்டன் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஷாருக்கான் குறித்து பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘வெப்தொடரான ‘லோகி’ கதாபாத்திரத்தின் பாலிவுட் வெர்ஷனில் ஷாருக்கான் நடிக்க வேண்டும். அவர் அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன். லண்டனில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கான் நடித்த ‘தேவதாஸ்’ படத்தைப் பார்த்தேன். அது எனக்கு மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது ’ என்றார்.

The post ‘லோகி’யாக ஷாருக்கான் நடிக்க வேண்டும் டாம் ஹிடில்ஸ்டன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tom Hiddleston ,Shah Rukh Khan ,Mumbai ,Bollywood ,Marvel ,Disney Plus Hotstar ,Shahrukh Khan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!