×

மனிதாபிமான வெளியேற்றம்: ஐ.நா தலைவர், புடின் பேச்சில் ஒப்பந்தம்

ரஷ்யா: போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ளார். அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். நேற்று அதிபர் புடினை சந்தித்து பேசினார். அப்போது, உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை அப்பட்டமான மீறல். மரியுபோலில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் என்று புடினிடம் அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அங்குள்ள பொதுமக்களை மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்ற புடின், அன்டோனியோ குட்டெரெசிடம் ஒப்புக்கொண்டார். …

The post மனிதாபிமான வெளியேற்றம்: ஐ.நா தலைவர், புடின் பேச்சில் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : UN ,Russia ,Secretary General ,Antonio Guterres ,Moscow ,Putin ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கிய 4 இந்திய...