×

டெஸ்ட் பர்ஸ்ட் லுக் வெளியானது

 

சென்னை: ‘டெஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்துள்ள படம் ‘டெஸ்ட்’. ஒய்நாட் ஸ்டுடியோ மூலம் இந்த படத்தை தயாரித்துள்ள சசிகாந்த், முதல்முறையாக அவரே இயக்குனராகவும் அறிமுகமாகிறார். ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சி.வி.குமார், கதிரேசன் ஆகியோர் இயக்குனர் அவதாரம் எடுத்த நிலையில் அந்த வரிசையில் சசிகாந்தும் இணைந்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மாதவன், சித்தார்த், நயன்தாரா இடம்பெற்றுள்ளனர். இந்த மூன்று கேரக்டர்களை சுற்றியே படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பெண் இசையமைப்பாளரான சக்திஸ்ரீ கோபாலன் படத்துக்கு இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

The post டெஸ்ட் பர்ஸ்ட் லுக் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Madhavan ,Siddharth ,Nayanthara ,Sasikanth ,Ynat Studio ,CV Kumar ,Kathiresan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய...