×

சோழவந்தான் அருகே களைகட்டிய கிடாய் சண்டை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நடைபெற்ற கிடாய் சண்டையில் 84 ேஜாடி ஆட்டுக் கிடாய்கள் பங்கேற்றன.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கல்புளிச்சான்பட்டியில் மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று கிடாய் சண்டை நடைபெற்றது. இதில் 84 ஜோடி ஆட்டுக் கிடாய்கள் களத்தில் மோதின. இதில் 75 முறை முட்டி அசராமல் நின்ற கிடாய்க்கு வெற்றிக்குரிய 8 கிலோ பித்தளை அண்டா பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. போட்டியில் இரண்டு கிடாய்களும் மோதி விழாமல் சமநிலையில் நின்றதால், இரண்டிற்கும் தலா 4 கிலோ பித்தளை அண்டா வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற கிடாய் உரிமையாளர்களுக்கும் கிராமத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவும், அஇபாபி பொதுச்செயலாளருமான பி.வி.கதிரவன், மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, கிடாய் முட்டு சங்க நிர்வாகிகள் வீரசிங்கம், முத்துப்பாண்டி, பவித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்புளிச்சான்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர். அனுமதி கோரி வழக்கு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூரைச் சேர்ந்த கோபால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மறைந்த முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். இதையொட்டி தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான கிடா முட்டு சண்டை போட்டியை வரும் மே 28ல் ஆவியூர் அய்யனார் கோயில் அருகே நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கக் கோரி ஆவியூர் காவல் நிலையத்தில் மனு அளித்தோம். இதுவரை எந்தவித பதிலும் இல்லை. எனவே, கிடா முட்டு சண்டைக்கு அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகி, ‘‘இதுவரை போலீசார் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை’’ என்றார். அரசுத் தரப்பில், ‘‘கிடா முட்டு சண்டை போட்டிக்கு அனுமதி வழங்கப்படவில்லை’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் தரப்பில் தேவைப்பட்டால் அனுமதி கோரி மீண்டும் ஆவியூர் காவல் நிலைத்தில் மனு அளித்து உரிய பரிகாரம் தேடிக் கொள்ளலாம்’’ எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்….

The post சோழவந்தான் அருகே களைகட்டிய கிடாய் சண்டை appeared first on Dinakaran.

Tags : Gadai ,Cholawanthan ,Cholhavandan ,Kadai ,Madurai district ,Sozhavanthan ,Cholawandan ,Dinakaran ,
× RELATED சோழவந்தானில் கிருஷ்ணர், ராதை திருக்கல்யாணம் பக்தர்கள் திரண்டனர்