×

பழஞ்சூரில் அமமுகவினர் ரகளை

பூந்தமல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா பெங்களூரில் இருந்து கார் மூலம் நேற்று முன்தினம் காலை பெங்களூரில் இருந்து புறப்பட்ட அவர் சென்னை மாநகர போலீசின் தொடக்க எல்லையான பழஞ்சூர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்தார். அப்போது அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சசிகலாவின் வாகனம் உள்ளே நுழைந்ததால் பின் வந்த 10 வாகனங்கள் மட்டும் சென்னைக்கு வர அனு மதி அளித் தனர். சசிகலாவின் வாகனத்துடன்  தொடர் ந்து முன்னும்பின்னும் வந்த கட்சி நிர்வாகிகள் வாகனங்கள் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் அமைத்து முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் போலீசாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சசிகலா வந்த வாகனத்தையும் போலீசார் நிறுத்தி வைத்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் தடுப்புகளை உடைத்து எறிந்துவிட்டு வாகனங்களை வேகமாக அங்கிருந்து எடுத்து சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் மூன்று கட்டமாக தடுப்புகளை அமைத்து சாலையில் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் நிர்வாகிகள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது….

The post பழஞ்சூரில் அமமுகவினர் ரகளை appeared first on Dinakaran.

Tags : Ama Mukha rally ,Palanjore ,Poontamalli ,Sasikala ,Bengaluru ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்