×

மலையாளத்தில் மம்மூட்டி – ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் – தி கோர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

மலையாளத்தில் மம்மூட்டி – ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல்-தி கோர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 54-வது கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழா இம்மாதம் மாதம் 20ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. மேலும் 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மலையாளத்தில் மம்மூட்டி – ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் -தி கோர்’ படம் கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார். இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா. மேலும் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டியுடன் முதல் முறையாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவுற்றதை அடுத்து இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

The post மலையாளத்தில் மம்மூட்டி – ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் – தி கோர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mammooti ,Jodika ,54th Goa International Indian Film Festival ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்