×

அரசு அருங்காட்சியகத்தில் பீரங்கி கல் குண்டு காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாதம் ஒரு வரலாற்று பொருள் காட்சிக்கு வைத்து வருகின்றனர். அதன்படி, இம்மாதத்திற்கான காட்சி பொருளாக பீரங்கியின் கல் குண்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராசு கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல மலைக் கோட்டைகள் உள்ளன. கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஜெகதேவி, மகாராஜகடை, தட்டக்கல், வீரபத்ரதுர்க்கம், நாகமலை, மல்லிகார்ஜூனதுர்க்கம் ஆகிய மலைகளில் கோட்டைகள் உள்ளது குறிப்பிடத்தக்கவைகளாகும். மண்ணால் ஆன தரைக்கோட்டைகள் இருந்ததற்கான தடயங்களும், சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. பீரங்கி கல் குண்டுகள் தயாரிக்க உறுதியற்ற கருங்கற்களே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஏனெனில்  அவைதான் பீரங்கியிலிருந்து வெடிமருந்தின் உதவியுடன், வேகமாக வெடித்து சிதறும் போது எளிதில் பல சிறு துண்டுகளாக உடைந்து பல பேரை ஒரே நேரத்தில் தாக்கும். தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இக்கல்குண்டு சிறிய அளவுடையது. இவை 10 செ.மீ. விட்டமும், 2 கிலோ எடையும் கொண்டதாகும். இக்கல்குண்டை பொதுமக்கள் பார்வையிட்டு வியப்படைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்….

The post அரசு அருங்காட்சியகத்தில் பீரங்கி கல் குண்டு காட்சிக்கு வைப்பு appeared first on Dinakaran.

Tags : Government Museum ,Krishnagiri ,Krishnagiri Government Museum ,Museum ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்