×

இடுக்கி அருகே மகள் பலாத்காரம் தந்தை அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவருக்கு 5 வயதில் ஒரு மகள் உண்டு. இந்த சிறுமியை மூன்றரை வயதில் இருந்தே மகள் என்றும் பாராமல் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாய் மாமாவும் அவருடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய், தனது மகளை அருகில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த காப்பக நிர்வாகிகள் மறையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார்  சிறுமியிடம் விசாரித்த போது தந்தையும், மாமாவும் சேர்ந்து கடந்த ஒன்றரை வருடங்களாக பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தந்தையை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாமாவை போலீசார் தேடி வருகின்றனர்….

The post இடுக்கி அருகே மகள் பலாத்காரம் தந்தை அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Idukki ,Thiruvananthapuram ,Karayur ,Idukki district ,Kerala ,
× RELATED மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் உறவினரை வெட்டி கொன்ற தொழிலாளி