×

உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ராமர் பாலம் வழக்கை தள்ளுபடி செய்ய மனு

புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜ. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் நேற்று புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட. அதில், ‘ராமர் பாலத்தை  தேசிய புராதான சின்னமாக அறிவிக்கக் கூடாது. இது, பொதுமக்களின் பயன்பட்டுக்காக கட்டப்பட்டவை கிடையாது. இது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மணல் திட்டுகள் மட்டுமே. இதற்கு ஆதாரமாக பல்வேறு தொல்லியல் ஆய்வு முடிவுகள் இருக்கிறது. இதைத்தவிர ராமர் பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே இந்திய எல்லைக்குள் உள்ளது. மற்ற பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருவேளை இது தேசிய புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டால், இந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகள் பாதுக்கப்படும். ஆனால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்படி பாதுகாக்க இயலும். அதனால், இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. …

The post உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ராமர் பாலம் வழக்கை தள்ளுபடி செய்ய மனு appeared first on Dinakaran.

Tags : Ram Palam ,Supreme Court ,New Delhi ,BJP ,Ram Bridge ,Subramania Swamy ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...