×

1,178 கணக்குகளை முடக்கும் உத்தரவு: மத்திய அரசுடன் பேச டிவிட்டர் விருப்பம்

புதுடெல்லி: டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் டிவிட்டர் கணக்குகளை முடக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக 1,178 கணக்குகளை முடக்க வேண்டுமென கடந்த 4ம் தேதி உத்தரவிட்டது. மேலும், உத்தரவுக்கு கட்டுப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதம் மற்றும் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.   இந்நிலையில், டிவிட்டர் செய்தித் தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அரசு அளித்த கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, விதிமுறைக்கு உட்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் எப்போதும் இந்திய அரசுடன் இணக்கமாக செயல்பட தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சருடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  அதே சமயம், எங்கள் ஊழியர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்,’’ என்றார்….

The post 1,178 கணக்குகளை முடக்கும் உத்தரவு: மத்திய அரசுடன் பேச டிவிட்டர் விருப்பம் appeared first on Dinakaran.

Tags : Twitter ,central government ,New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே...