×

மனைவி கொலை கணவனுக்கு 10 ஆண்டு சிறை

செங்கல்பட்டு: மனைவியை கொலை செய்த வழக்கில், கண வனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை குன்றத்தூர் சேக்கிழார் நகரை சேர்ந்தவர் ராஜி. (43)   இவருக்கும் மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஓரிரு நாட்களில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணவன், மனைவி இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த ராஜி, மனைவி மகேஸ்வரியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதுதொடர்பாக போலீசார், ராஜியை கைது செய்தனர்.இந்த வழக்கு, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, குற்றவாளி ராஜி மீது தொடரப்பட்ட வழக்கு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுதரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார்….

The post மனைவி கொலை கணவனுக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Gana Van ,Chennai ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை