×

மான்செஸ்டர் நகரில் சென்னை சிறுவனுக்கு கால்பந்து பயிற்சி

பெரம்பூர்: அப்போலோ டயர்ஸ் யுனைடெட் ‘வி பிளே’ என்ற பெயரில், அடிமட்ட கால்பந்தாட்ட போட்டிகளை நடத்தி வருகிறது. புகழ்பெற்ற கால்பந்தாட்ட கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் ஒத்துழைப்போடு நடத்தப்படும் இந்த போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை தரும் சிறுவர்களை தேர்ந்தெடுத்து அதில், 4 நபர்களை மான்செஸ்டர் நகருக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தேர்வு நேற்று சென்னை ஓட்டேரியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் நகரில் இருந்து 7 கால்பந்தாட்ட வீரர்கள் வருகை தந்து சிறுவர்களை தேர்வு செய்தனர். அதன்படி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த பிரியரஞ்சன், மேகாலையாவை சேர்ந்த பேட்ரிக் குர்பா, பூனேவை சேர்ந்த ரோனால்டு சிங், குணால் யாலி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், மான்செஸ்டர் நகருக்கு சென்று கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.  இளைஞர்களிடையே, கால்பந்தாட்ட போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் வசதி வாய்ப்புகள் இல்லாத சிறுவர்களுக்கும் திறமை மிகுந்த சிறுவர்களுக்கும் நல்ல தரமான பயிற்சி அளிக்க உள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்….

The post மான்செஸ்டர் நகரில் சென்னை சிறுவனுக்கு கால்பந்து பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Manchester ,Perambur ,Apollo Tires United ,Play ,Dinakaran ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...