×

தங்கலான் டப்பிங்கை நிறைவு செய்த விக்ரம்

தங்கலான் படத்தின் டப்பிங்கை நடிகர் விக்ரம் நிறைவு செய்தார். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என நட்சத்திர பட்டாளத்தை கொண்டு பா.ரஞ்சித் இயக்கும் படம் ‘தங்கலான்’. இந்த படத்தின் கதைக்களம் கேஜிஎஃப் தோன்றுவதற்கு முன்பு அந்த கேஜிஎஃப் நிலத்தில் வாழ்ந்த, தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றியது. கேரக்டருக்காக எந்த நிலைக்கும் சென்று தன்னை வருத்திக்கொண்டு நடித்து அசத்தும் விக்ரம், இந்த படத்திலும் அதேபோன்ற பாணியை பின்பற்றியுள்ளார். ஒவ்வொரு படத்திலும் சமூக அவலங்களை பற்றி பேசும் பா.ரஞ்சித், இந்த படத்திலும் அதை செய்திருக்கிறார்.

அதனால் தங்கலான் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதிரடி சண்டை காட்சிகள், ரத்தம் தெரிக்கும் போர் காட்சிகள் என மிரட்டும் விதமாக படத்தின் டீசர் அமைந்தது. இந்நிலையில், தங்கலான் திரைப்படத்தின் டப்பிங்கை இரண்டு மணி நேரத்தில் விக்ரம் முடித்துவிட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் அவருக்கு பெரியளவில் வசனங்கள் இல்லாத காரணத்தால், டப்பிங் பணிகளை விரைவில் முடித்துள்ளார் என கூறப்படுகிறது.

The post தங்கலான் டப்பிங்கை நிறைவு செய்த விக்ரம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : VIKRAM ,Parvathi ,Malavika Mohanan ,Pasupati ,Ranjit ,KGF ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...