×

மண்பாண்ட தொழிற்கூடம் அமைக்க 21 நபர்கள் தொழிற்கூட்டுறவு சங்கங்கள் அமைத்து நிலம் வழங்கும் பட்சத்தில் அரசு நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் காந்தி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், திருப்பத்தூர் நல்லத்தம்பி (திமுக) பேசுகையில் ‘‘திருப்பத்தூர் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் மண்பாண்ட தொழிற்கூடம் அமைக்க அரசு ஆவன செய்யுமா” என்றார். இதற்கு பதிலளித்து பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ‘‘மடவாளம் கிராமத்தில் சிலர் தனித்து தொழில் செய்து வருகின்றனர். கதர் கிராம வாரியத்தில் பதிவு செய்யவில்லை. குறைந்தபட்சம் 21 நபர்கள் தொழில் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து நிலம் கொடுக்கும் பட்சத்தில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். மாநிலம் முழுவதும் 105 கோ ஆப்டெக்ஸ்களும், வேறு மாநிலத்தில் 49 கோ ஆப்டெக்ஸ் என்று மொத்தம் 154 கோஆப்டெக்ஸ் கடைகள் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஆட்சி அமைத்த பிறகு கோஆப்டெக்ஸில் பல்வேறு புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வியாபாரம் இருமடங்காக அதிகரித்துள்ளது. திருப்பத்தூரில் முடிந்தால் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று பதில் அளித்தார்….

The post மண்பாண்ட தொழிற்கூடம் அமைக்க 21 நபர்கள் தொழிற்கூட்டுறவு சங்கங்கள் அமைத்து நிலம் வழங்கும் பட்சத்தில் அரசு நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் காந்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Legislation ,Gandhi ,Chennai ,Chattapalava ,Thirupattur Nallathampi ,Dizzaga ,Tirupattur Union ,Madawalam ,Legislation Gandhi ,
× RELATED கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர்...