×

புதுச்சேரியில் ஆட்சி மாற்றமா? கவர்னர் தமிழிசை பரபரப்பு பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் கவர்னர் மூலம் ஆட்சி மாற்றம் செய்யப்போவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 24ம் தேதி (இன்று) புதுவைக்கு வருகிறார். அவரது வருகை புதுச்சேரி வளர்ச்சி பாதையில் முக்கிய மைல் கல்லாக இருக்கும். அமித்ஷாவின் வருகையை புதுச்சேரி வளர்ச்சி திட்டத்துக்கான வருகையாக மட்டுமே பார்க்க வேண்டும். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லோருமே புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். புதுச்சேரியில் கவர்னர் மூலம் ஆட்சி மாற்றம் செய்யப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகள் கூறுவது ஆதரமற்றது. நான் என்னுடைய பணியை செய்து கொண்டிருக்கிறேன். ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக கவர்னர் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறுவதை பார்த்து சிரிப்புதான் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். …

The post புதுச்சேரியில் ஆட்சி மாற்றமா? கவர்னர் தமிழிசை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,TNI Stirma ,Puducherry ,TN Stir ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...