×

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் பொருட்கள் இறக்க வந்த லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்-தொட்டியம் அருகே பரபரப்பு

தொட்டியம் : தொட்டியம் அடுத்த மணமேடு கிராமத்தில் நியாய விலை கடையில் தரம் குறைந்த அரிசி வழங்கப்படுவதை கண்டித்து நியாய விலைக் கடை பொருட்கள் இறக்க வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.தொட்டியம் தாலுகா மணமேடு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரம் குறைந்து இருப்பதாகவும், அதனை சமைத்து சாப்பிடுவதற்கு உரிய தரம் இல்லாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று ரேஷன் பொருட்களை இறக்குவதற்காக வந்த லாரியை சிறை பிடித்த பொதுமக்கள் தரம் குறைந்த அரிசியை தங்களுக்கு வினியோகம் செய்யக்கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி ரேஷன் கடைக்கு நேரில் வந்து அங்கிருந்த பொதுமக்களிடம் தரமான அரிசி வழங்கப்படும் என கூறியதோடு அரிசியை தவிர சர்க்கரை ஆயில் பருப்பு உள்ளிட்ட பொருட்களை மட்டும் லாரியிலிருந்து ரேஷன் கடைக்கு இறக்கி வைக்குமாறு உத்தரவிட்டார். அதிகாரிகளின் சமரசத்தை அடுத்து பொதுமக்கள் லாரியை விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது….

The post ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் பொருட்கள் இறக்க வந்த லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்-தொட்டியம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thotiyam ,Thaniyam ,Mamedu village ,Dinakaran ,
× RELATED தொட்டியம் அருகே பறக்கும்படை சோதனையில் ₹96,000 ரொக்கம் பறிமுதல்