×

கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்: பேரவையில் கே.பி.சங்கர் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் (திமுக) பேசுகையில், ‘கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்ததது. அது இடியும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே மகப்பேறு மருத்துவமனை நடந்து கொண்டிருந்தது. அதுவும் கலைஞர் ஆட்சியில் 2006லிருந்து 2011 வரை நடந்தது. அதுவும் இடியும் தருவாயில் உள்ளது. இதனால், மகப்பேறு மருத்துவமனையும் செயல்படவில்லை. இப்போது ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது. அங்கு மக்கள் செல்லக்கூடிய நிலை இல்லை. எனவே அந்த மருத்துவமனையை கட்டித்தர வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு: கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை கட்டிடம் பலவீனமாக உள்ளதால் அதனை இடித்துவிட்டு வரும் நிதியாண்டில் நிர்வாக அனுமதி பெற்ற பின் புதிதாக மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது எவ்வளவு விரைவாக கட்டிடத்தை சீரமைத்து, புதிதாக கட்டி தரமுடியும் என்பதை அறிந்து உடனடியாக செய்து தரப்படும். திருவொற்றியூர் தொகுதியை பொறுத்தவரை இதே மாதிரி 6 இடங்களில் மருத்துவமனை இருக்கிறது. அதில் தினந்தோறும் 1500 பேர் வெளி நோயாளிகளாக வந்து செல்கிறார்கள். எனவே, இதை கருத்தில் கொண்டு விரைவில் இந்த பணி செய்து முடிக்கப்படும்….

The post கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்: பேரவையில் கே.பி.சங்கர் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kathivakkam Highway ,KP Shankar MLA ,Chennai ,Thiruvottiyur MLA ,KP Shankar ,DMK ,Assembly ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...