×

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நியாய விலை கடைகள் கட்ட நடவடிக்கை: கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூட்டுறவு நியாய விலைக்கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி,’தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி மூலம் கூட்டுறவு நியாவிலைக்கடைகள் கட்டப்பட்டு  திறக்கப்படாமல் உள்ளது. அதை திறப்பதற்கும், 100 நாட்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூட்டுறவு துறை நியாவிலைக் கடைகளை கட்டுவதற்கும் பணிகளை ஊரக வளர்ச்சி துறை மூலம் வழங்க வேண்டும்’ என்றார். இதற்கு பதிலளித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில்,’தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எங்கு கடைகள் திறப்படாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டு தெரிவித்தால், கடைகள் திறக்கப்படும். ஊரக வளர்ச்சி துறை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்….

The post 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நியாய விலை கடைகள் கட்ட நடவடிக்கை: கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Cooperatives ,Minister ,I.I. Peryasami ,I.I. PEREYASAMI ,Minister I.I. Peryasami ,Dinakaraan ,
× RELATED நடப்பாண்டில் ரூ.16,500 கோடி இலக்கு; புதிய...