×

திருவள்ளூர் மாவட்டத்தில் வாசனை திரவியம், ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்தால் அரசு உதவி செய்யும்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் வாசனை திரவியம், ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க தனியார் நிறுவங்கள் முன்வந்தால் அரசு உதவி செய்யும் என்று பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டபேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு விவசாயமும், பூ விவசாயமும் அதிகமாக இருப்பதால் மரவள்ளிக்கிழங்கை வைத்து ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும், பூக்கள் வைத்து வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றார்.  இதற்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,  திருவள்ளூர் மாவட்டத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. பல தொழிற்சாலைகள் அந்த பகுதியில் அமைந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் வாசனை திரவியம் மற்றும் ஜவ்வரிசி தயார் செய்யும் தொழிற்சாலை அமைக்க முன்வந்தால் அரசு நிச்சயம் உடன் இருந்து உதவி செய்யும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்….

The post திருவள்ளூர் மாவட்டத்தில் வாசனை திரவியம், ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்தால் அரசு உதவி செய்யும்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Javarisi factory ,Thiruvallur district ,Chennai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்...