×

குடும்பத்தினர் சந்தேகப்பட்டதால் விரக்தி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு: கணவன் சந்தேகப்பட்டதால் மனஉளைச்சல் அடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36). தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவரது தாய்மாமன் மகள் கலைவாணிக்கும் (32) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சுரேஷ், தனது நண்பருக்கு கால் செய்வதற்காக கலைவாணியின் செல்போனை எடுத்துள்ளார். அப்போது, கலைவாணியின் செல்போனில் நிறைய குறுந்தகவல்கள் இருந்தது. அதிகமாக வாட்சப் வீடியோ கால்கள் வந்தது தெரிந்தது. இதுபற்றி அவர், மனைவியிடம் கேட்டுள்ளார்.  அதற்கு, அவர்  பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார். இதையடுத்து சுரேஷ், தனது பெற்றோர் மற்றும் கலைவாணியின் பெற்றோருக்கு தெரிவித்தார். இதனால், அனைவருக்கும் கலைவாணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையறிந்த கலைவாணி, மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுரேஷ் வெளியே படுத்து கொண்டார். கலைவாணி படுக்கையறையில் தூங்க சென்றார். நேற்று காலை வெளியில் படுத்திருந்த சுரேஷ், உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், மனைவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கலைவாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்படி செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குறுந்தகவல்கள் மற்றும் வீடியோகால் அனுப்பியது யார், கலைவாணியை அந்த நபர் குறுந்தகவல்கள் அனுப்பி மிரட்டினாரா, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். மேலும், திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால், செங்கல்பட்டு ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது….

The post குடும்பத்தினர் சந்தேகப்பட்டதால் விரக்தி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Suresh ,Chenkalputtu Periyanatham ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை